முகப்பு
புத., 2 செப்., 2026
வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்பதவி இழக்கும் காரைக்குடி மேயர் காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சைதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்பதவி இழக்கும் காரைக்குடி மேயர் காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சைதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி

காரைக்குடியில்100 கோடி மதிப்புள்ள கோவில் இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி என புகார்

காரைக்குடி அருகே உள்ள இலுப்பக்குடி அருள்மிகு சுயம்பிரகாசேசுவர் கோவில் தேவஸ்தானத்திற்கு காரைக்குடி, இலுப்பக்குடி, புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலங்களை அவ்வப்போது தனியார்கள் ஆக்கிரமிப்பதும், அதை மீட்க அறநிலையத்துறை போராடுவதும் தொன்று தொட்டு வழக்கமாக உள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள நகரத்தார் 9 கோவில்களில் ஒன்றாகும் பரம்பரை அறங்காவலர்களால் சுழற்சி முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அதன்படி காரைக்குடி முடியரசன் சாலையில் குறிச்சிபுரவு பகுதியில் சுமார் 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. இலுப்பக்குடி தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட இடம் என ஏற்கனவே அங்கு போர்டு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த இடத்தை ஒரு சிலர் இன்று காலை ஜே.சி.பி., துணையுடன் சுத்தம் செய்ய முயன்றனர். இதையடுத்து இலுப்பக்குடி பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காரைக்குடி வட்டாட்சியர் ராஜா, வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் இளையராஜா ஆகியோர் நிலத்தை சுத்தம் செய்யும் பணிகளை நிறுத்தி ஜே.சி.பி., வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையின்போது, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பழநியைபோல காரைக்குடியிலும் கோயில் நில ஆக்கிரமிப்பு புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனு. குறிப்பு : 2011 ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கோவில் நில அபகரிப்பு என இதே இடத்தை பத்திர பதிவு செய்து பட்டா பெற்று இருந்து நான்கு பெயர்கள் பெயரில் இருந்த பட்டாக்கள் ரத்து செய்து அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது