முகப்பு
புத., 2 செப்., 2026
வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்பதவி இழக்கும் காரைக்குடி மேயர் காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சைதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்பதவி இழக்கும் காரைக்குடி மேயர் காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சைதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி

காரைக்குடி அருகே 2400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்-பெண் கைது

காரைக்குடி அருகே உள்ள வேலங்குடி கிராமத்தில் கணபதி அம்பலம் தெருவில் வசித்து வருபவர் பாண்டி முருகன். இவரது மனைவி கோமதி. அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக இருக்கும் கவிதாவும், கோமதியும் மிக நெருங்கிய தோழிகள். இதனால் கவிதா தனது ரேஷன் கடைக்கு வரும் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டிய ரேஷன் பொருள்களை நேரடியாக லாரியுடன் எடுத்துச் சென்று கோமதி வீட்டில் அரிசி மூடைகளை இறக்கி வந்துள்ளார். இது குறித்த தகவல் பள்ளத்தூர் காவல்துறையினருக்கு கிடைத்ததை தொடர்ந்து இன்று அதிரடியாக கோமதியின் வீட்டில் சோதனை செய்தபோது 48 மூடைகளில் சுமார் 50 கிலோ விதம் 2400 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த மூடைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த கோமதியையும், அவரது தோழி கவிதா ஆகியோரிடம் விசாரணை செய்ததில், பள்ளத்தூரில் தொடர்ந்து கடத்தல் ரேஷன் அரிசி மூட்டைகளை வாங்கி பட்டை தீட்டி விற்பனை செய்யும் சோலை ஆண்டவர் அரிசி ஆலைக்கு அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது.