முகப்பு
சனி, 18 ஜூலை, 2026
காரைக்குடி அருகே ரூ.500 லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர், லைன்மேன் கைதுராஜ ராஜன் கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் விழா காரைக்குடியில் கனிம வள துறை அமைச்சர் வீடு, கட்சி அலுவலகம் அருகே போலீசார் குவிப்புகாரைக்குடி நகர் பகுதியில் கல்லால் தாக்கி வாலிபர் கொலைகாரைக்குடியில் மாவட்ட ரோல் பால் சாம்பியன்ஷிப் - 2026 போட்டிபோதை ஒழிப்பு தீப்பந்த பேரணி கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு தொடங்கி வைத்தார்பிரியாணி கடையில் வேலை பார்த்த இளைஞர் மாடியில் இருந்து விழுந்து பலிகாரைக்குடியில் சிங்கப்பெண் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டனர்தொழிலாளியை தாக்கிய போதை ஆசாமி; சிசிடிவி காட்சிகள் வெளியீடுதமிழக அரசின் முடிவை காங்கிரஸ் ஆதரிக்கும் * காரைக்குடியில் ப.சிதம்பரம் எம்.பி., பேட்டிகாரைக்குடி அருகே ரூ.500 லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர், லைன்மேன் கைதுராஜ ராஜன் கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் விழா காரைக்குடியில் கனிம வள துறை அமைச்சர் வீடு, கட்சி அலுவலகம் அருகே போலீசார் குவிப்புகாரைக்குடி நகர் பகுதியில் கல்லால் தாக்கி வாலிபர் கொலைகாரைக்குடியில் மாவட்ட ரோல் பால் சாம்பியன்ஷிப் - 2026 போட்டிபோதை ஒழிப்பு தீப்பந்த பேரணி கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு தொடங்கி வைத்தார்பிரியாணி கடையில் வேலை பார்த்த இளைஞர் மாடியில் இருந்து விழுந்து பலிகாரைக்குடியில் சிங்கப்பெண் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டனர்தொழிலாளியை தாக்கிய போதை ஆசாமி; சிசிடிவி காட்சிகள் வெளியீடுதமிழக அரசின் முடிவை காங்கிரஸ் ஆதரிக்கும் * காரைக்குடியில் ப.சிதம்பரம் எம்.பி., பேட்டி
தமிழக அரசின் முடிவை காங்கிரஸ் ஆதரிக்கும் * காரைக்குடியில் ப.சிதம்பரம் எம்.பி., பேட்டி
மாவட்ட செய்தி🔴 உடனுக்குடன்

தமிழக அரசின் முடிவை காங்கிரஸ் ஆதரிக்கும் * காரைக்குடியில் ப.சிதம்பரம் எம்.பி., பேட்டி

காரைக்குடி, ஜூன் 11- தமிழக அரசு முடிவை காங்கிரஸ் ஆதரிக்கும் என காரைக்குடியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி., கூறினார்.

எழுத்தாளர் Sivagangai Admin · 11 ஜூன், 2026
8 நிமிட வாசிப்பு
காரைக்குடி எம்.பி., அலுவலகத்தில் ப.சிதம்பரம் எம்.பி., பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது: நடந்து முடிந்த தேர்தலிலே மக்களுடைய தீர்ப்பை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்கிறது. அடக்கத்தோடு தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம். புதிதாக அமைந்த தமிழக வெற்றிக் கழக அரசுக்கும், முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கும் என்னுடைய பாராட்டுகளை, வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை கடந்த வாரம் சென்னை தலைமைச் செயலகத்திலே சந்தித்து, அவருக்கு நேரடியாக வாழ்த்து தெரிவித்தேன். குறிப்பாக காரைக்குடி தொகுதியிலே காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி வெற்றி பெறவில்லை. ஆனாலும் அந்த முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும், இன்று சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் அனைவருக்கும், உதாரணமாக காரைக்குடியில் டாக்டர் டி.கே. பிரபு, மானாமதுரையிலே இளங்கோவன், சிவகங்கையிலே குழந்தை ராணி, திருப்புத்தூரிலே சீனிவாஸ சேதுபதி, நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமயத்தில் ரகுபதி, ஆலங்குடியிலே மெய்யநாதன் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளை, பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." இயக்குனர் பாரதிராஜா மறைவுக்கு இரங்கல் : மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை, அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டணி கட்சிகளின் ஆதரவு மற்றும் தேர்தல் வாக்குப்பதிவால் இந்த அரசு அமைந்திருக்கிறது. இந்த அரசுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமையிலே தலைமை ஆதரவு தருவதாக தெரிவித்தது. அதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவு தெரிவித்தார்கள். இது நிலையான அரசாக நல்லாட்சி தர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்த தேர்தல்ல யாரும் எதிர்பார்க்கல. நீங்களும் எதிர்பார்க்கல, எந்த ஊடகங்களும் எதிர்பார்க்கல. கருத்துக்கணிப்பு எடுத்தவர்களும் எதிர்பார்க்கவில்லை. நான் எதிர்பார்க்கல, எங்க கட்சியும் எதிர்பார்க்கல. ஆனால், தமிழக வெற்றிக் கழகம் ஏறத்தாழ 35 சதவீத வாக்குகளை தமிழ்நாட்டிலே வாங்கியிருக்கிறது. அது ஒரு மகத்தான வாக்கு பதிவு. இந்த மகத்தான வாக்கு பதிவை வாங்கியிருந்த தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்திருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலே இருந்த கூட்டணி, 24 சதவீதம் வாக்குகள், அப்புறம் மற்றவர்கள் எல்லாம் சின்னச் சின்ன சதவீதத்துல வாக்கு கிடைத்திருக்கிறது. ஆனா எல்லாரையும், எல்லாத்தையும் கூட்டினா கூட 35 சதவீதத்தை நெருங்க முடியவில்லை. ஆகவே, இந்த அரசுக்கு என்னுடைய வாழ்த்துகள். கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளிலேயே இவ்வளவு பெரிய வெற்றியை அடைந்ததற்காக பாராட்டுகள். எனக்கு தெரிந்தவரை இளைஞர்கள், குறிப்பாக இளம் பெண்கள் பெருவாரியாக வாக்களித்திருக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திலேயும் ஒரு ஓட்டாவது இருந்திருக்கிறது. அதுக்கப்புறம் அனைத்து பிரிவுகளிலேயும் வாக்களித்திருக்கிறார்கள். குறிப்பாக, என்னுடைய பார்வையில நகர்ப்புற பகுதிகளில், நகரமயமாக்கப்பட்ட பகுதிகளில், பெரிய வெற்றியை அடைந்திருக்கிறார். உதாரணத்துக்காக சென்னை, கோவை, மதுரையிலெல்லாம் அனைத்து இடங்களிலேயும், ஏறத்தாழ அனைத்து இடங்களிலேயும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். சென்னையில 16 இடங்கள்ல 14 இடங்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். மதுரையில அப்படித்தான், கோவையில அப்படித்தான். இளைஞர்களுடைய நம்பிக்கையை காப்பாற்றி, அவர்களுக்கு, அவர்களுக்கான திட்டங்களை, வேலைவாய்ப்பு திட்டங்கள், அவர்கள் கல்வி திட்டங்கள், அவர்கள் தொழில் செய்வதற்கான திட்டங்களை அரசு வரையறுத்து நிறைவேற்ற வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை." நரேந்திர மோடி அவர்களின் சாதனை மற்றும் ஜவஹர்லால் நேருவின் ஒப்பீடு குறித்து நான் பதிவு போட்டிருக்கேன். இன்று 4399 நாட்கள் தொடர்ந்து நரேந்திர மோடி பாரத பிரதமராக இருந்தது சாதனை தான். அதுல ஒன்னும் மறுப்பில்லை. ஆனா, ஜவஹர்லால் நேருவின் சாதனையை மிஞ்சி இருப்பதாக அவர் சொல்லுவது சரி, அவர் கட்சி சொல்வது சரி. ஊடகங்கள் எப்படி அதை விளக்கமில்லாமல், ஒரு குறிப்பில்லாமல் பிரசுரிக்கிறாங்கன்னு எனக்கு தெரியல. ஏன்னா, 1947-லேயிருந்து 1952 வரையும் ஐந்து ஆண்டுகள் ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தார். அதற்குப் பிறகுதான் 1952-லேயிருந்து 1964 வரைக்கு 4398 நாட்கள் பிரதமராக இருந்தார். முதல் ஐந்து ஆண்டுகள் பிரதமராக இருந்தாரே, அது ஒரு ஏறத்தாழ 1800 நாட்கள் வருகிறதே. அதை சாதனைன்னு போட்டுட்டு, பின் குறிப்புன்னு போடணும்ல? அதை எந்த ஊடகமும் எந்த பத்திரிகையும் போடல, எந்த தொலைக்காட்சியும் சொல்லல. அது தவறா, பிழையா, இல்ல வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டதா என்று ஊடக நண்பர்களைத் தான் நான் கேட்கணும். பாரதிய ஜனதா கட்சியை நான் கேட்க முடியாது. அவர்கள் கொண்டாடலாம், அவர்களுக்கு வாழ்த்துகள், பாராட்டுகள்; அது சாதனை தான். ஆனா ஜவஹர்லால் நேரு 4398 நாட்கள் ப்ளஸ் ஐந்து ஆண்டுகள் என்பதை மறந்துவிடாதீர்கள்." கேள்வி: முதலமைச்சர் விஜயை பார்த்தப்ப ஏதாச்சும் கோரிக்கை வைத்தீர்களா? பதில்:* "இல்லை, இல்லை. ஒன்னும் கோரிக்கை வைக்கல. முதல் முறையாக அவரை சந்திக்கிறேன். அவர் சொன்னாரு, ஒரு முறை விமானத்துல சென்னையிலிருந்து டெல்லி போகும்போது பல ஆண்டுகளுக்கு முன்னாடி சந்தித்ததாக நினைவு இருக்கிறதா சொன்னாரு, எனக்கு நினைவில்லை. 'நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். நான் முதலமைச்சராக வந்த பிறகு முதல் முறையாக உங்களை சந்திக்கிறேன், வாழ்த்து சொல்வதற்குத் தான் வந்திருக்கேன்' அப்படின்னு வாழ்த்து சொல்லிட்டு, இரண்டு புத்தகங்களை அவருக்கு நினைவு பரிசாக வழங்கினேன். கோரிக்கை இன்னும் வைக்கல." கேள்வி: காங்கிரஸ் கட்சியினுடைய அடுத்த தேசிய தலைவர்?. பதில்:* இதற்கு முன்னாடி பல பேர் தமிழகத்தில் இருந்து தேசிய தலைவராக இருந்துள்ளார்கள். எனக்கு எப்படி தேசிய தலைமை, என்கிட்ட அந்த மாதிரி செய்தி இல்லையே."
கேள்வி: 'இந்தியா' கூட்டணி கூட்டத்தில் திமுக கலந்து கொள்ளாதது பற்றி... பதில்:* "நான் மு.க. ஸ்டாலின் அவர்களையும் சந்தித்தேன், முதலமைச்சரை சந்தித்த பிறகு ஒன்று இரண்டு நாட்கள்ல சந்தித்தேன். மரியாதை நிமித்தமாக. ஏன்னா தேர்தலுக்குப் பிறகு நான் டெல்லிக்கு போயிட்டேன். டெல்லியில போயிட்டு மே மாதம் இறுதியில தான் சென்னைக்கு வந்தேன். அதனால அவரை சந்தித்தேன், அவருக்கு நன்றி தெரிவித்தேன். கருத்துப் பரிமாறிக்கொண்டோம். அவரு 'இந்தியா' கூட்டணியிலிருந்து விலகுவதாக எனக்குச் சொல்லல. அது முடிவான முடிவான்னு எனக்குத் தெரியாது. இந்த கூட்டத்துல கலந்துகொள்ளவில்லை, அது தெரியும்." கேள்வி: திமுக கூட்டணியில் காங்கிரஸ் வந்தது தங்களுக்கு வருத்தம் என்று செல்வப் பெருந்தகை கூறியிருக்கிறாரே? பதில்:* "இங்க பாருங்க, விரும்புவது விரும்பாதது வேற. காங்கிரஸ் தலைமை எல்லாரையும் கலந்து முடிவெடுத்துவிட்டது. அந்த முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம், அவ்வளவுதான்." கேள்வி: மேகதாது அணைக்கட்டு விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர்... பதில்:* "அந்த பிரச்சனையெல்லாம் அரசு முடிவெடுக்கட்டும். அரசு என்ன முடிவெடுத்ததோ, திராவிட முன்னேற்றக் கழக அரசுல, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசுல முடிவெடுத்ததை காங்கிரஸ் கட்சி ஆதரித்தது. அதே மாதிரி தமிழ்நாடு அரசு முடிவெடுப்பதை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும்." கேள்வி: அண்ணாமலை பாஜக-விலிருந்து விலகியது பற்றி... பதில்:* "நான் ஒன்னும் பெருசா பார்க்கல. நான் கருத்துச் சொல்ற அளவுக்கு... அவரு கட்சியிலிருந்து விலகி ஒரு இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார். அது அரசியல் கட்சியாக மாறுமா, மாறாதான்னு எனக்குத் தெரியாது. பாரதிய ஜனதா கட்சியில அவரை சரியாக மதிக்கவில்லை, பயன்படுத்தவில்லை என்றுதான் அவர் பேட்டியிலிருந்து நான் உணர்கிறேன். அது உண்மையா இல்லையான்னு தெரியாது. அவர் விலகியிருக்கிறார், ஒரு இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார், அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்." கேள்வி: தவெக-வோடு காங்கிரஸ் கூட்டணி அமைப்பது பற்றி. பதில்:* "தவெகா, பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரையில் 'Ideological enemy' (கொள்கை ரீதியாக, கருத்தியல் ரீதியாக எதிரி) என்று சொல்லிவிட்டார்கள். மதச்சார்பின்மையை ஏற்றுக் கொள்ளுகிறார்கள். மாநில உரிமைகளைப் பாதுகாப்போம் என்று சொல்கிறார்கள். இந்த இரண்டு பொருள் போதுமே? தமிழக வெற்றிக் கழக அரசை ஆதரிப்பதற்கு. மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் என்ற அடிப்படையான கொள்கைகளிலிருந்து விலகாத வரை அவர்களை ஆதரிப்பதுல எந்த தவறும் கிடையாது. நான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவர்கள் தலைவர்களோடு பேசினேன். இதைத்தான் சொல்றாங்க. மதச்சார்பின்மை, மாநில அரசு, மாநிலத்தினுடைய உரிமைகள் இவை பாதுகாப்பேன் என்று சொல்கிறார், அவருக்கு ஆதரவு தருவதுல என்ன தவறு? ஆதரவு தராது இருந்தால், ஒன்று மறுதேர்தல் வந்திருக்கும். மறுதேர்தலை யாராவது விரும்புகிறார்களா? தமிழக மக்கள் விரும்பவில்லை என்பதுதான் என்னுடைய கணிப்பு. இரண்டாவது, மறுதேர்தல் வர்ற வரைக்கும் குடியரசுத் தலைவர் ஆட்சி தான். குடியரசுத் தலைவர் அரசு என்பது பாரதிய ஜனதா கட்சி அரசு. ஆக, பாரதிய ஜனதா கட்சி பின் வழியாக வந்து அரியணை கட்டிலிலே அமர்ந்துவிடும். ஜனாதிபதி ஆட்சி, ஆளுநர் ஆட்சி என்பது பாரதிய ஜனதா கட்சி ஆட்சி தான். அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த இரண்டு விபத்துகளைத் தவிர்ப்பதற்காக எங்கள் தலைமை முடிவெடுத்தது. அந்த முடிவை, அதே கருத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஆக நாங்கள், எங்களுடைய நிலைப்பாடு பொதுவான நிலைப்பாடு தான்." கேள்வி: தவெக ஆட்சி குறித்து... பதில்:* "இப்பத்தானே ஆட்சிக்கு வந்திருக்காங்க. இதுல 31 அமைச்சர்கள் சட்டமன்றத்துக்குள்ளே அனுபவம் இல்லாதவர்கள். 101 சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் முறையாக சட்டமன்றத்துக்குள்ள வந்திருக்காங்க. அவர்களுக்கு அவகாசம் கொடுக்கணுமா இல்லையா? எந்த அரசுக்கும் அவகாசம் கொடுக்கணும். 10 ஆண்டுகள், 10 ஆண்டுகள் இப்ப ஒரு கட்சி இருந்து, இப்ப கேரளத்துல 10 ஆண்டுகள் கழித்து இடதுசாரி முன்னணியைத் தோற்கடித்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. சதீஷன் அவர்களுக்கு என்ன அவகாசம் கொடுக்கிறோமோ, அதே அவகாசத்தைத்தானே விஜய் அவர்களுக்கும் கொடுக்க வேண்டும்." கேள்வி: அதிமுக-விலிருந்து விலகி தவெக-வில் இணைபவர்கள் பற்றி... பதில்:* "அதிமுக கட்சி ஒரு கட்டுப்பாட்டுல இல்லை. அதிலிருந்து விலகுறாங்க அப்படின்னு நினைக்கிறேன். (அமைச்சர்கள் துறை நுணுக்கங்களை தெரிந்து கொள்ள அவகாசம் வேண்டும்)... அதிகாரிகள் நியமனம் இப்பத்தானே நடந்திருக்கு? அந்த அமைச்சர்கள் எல்லாம் துறையினுடைய நுணுக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதுக்கு இடையில நன்றி தெரிவிக்க வேண்டும், தொகுதி வாக்காளர்களை, தோழர்களை சந்திக்க வேண்டும். குறுகிய காலத்துல இவ்வளவு வேலைகளைப் பார்க்கணும்னா அவங்களுக்கு அவகாசம் கொடுக்கணும்." கேள்வி: விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்காதது பற்றி... பதில்:* "அது அவரைக் கேட்க வேண்டிய கேள்வி. பிரதமர் மோடி 12 ஆண்டுகளாக பத்திரிகையாளர்கள் சந்திக்கலைன்னு நாங்கள் விமர்சனம் பண்ணோம். இவர் ஒரு மாதம் தானே ஆயிருக்கு, சந்திக்கலாம். அது போகப் போகத் தானே. எல்லாத்துக்கும் முதல் நாளே கருத்து தெரிவிக்க முடியாது. சரிதானா, என்றார்.

இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?

மொத்த வாக்குகள்: 0

🗞 மற்ற செய்திகள்(17)

மாவட்ட செய்தி

மின்சாரம் தாக்கி தனியார் இ சேவை மைய ஊழியர் பலி

18 ஜூலை, 2026
மாவட்ட செய்தி

காரைக்குடியில் தாசில்தார் வீட்டில் 67 பவுன் திருட்டு

18 ஜூலை, 2026
கல்விக்கு செய்யும் முதலீடு ஒரு  தலைமுறையையே உயர்த்தும் ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய அமைச்சர் டாக்டர் பிரபுமாவட்ட செய்தி

கல்விக்கு செய்யும் முதலீடு ஒரு தலைமுறையையே உயர்த்தும் ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய அமைச்சர் டாக்டர் பிரபு

10 ஜூலை, 2026
காரைக்குடி அதை சுற்றுவட்டாரத்தில்  இடி மின்னல் சூறை காற்றுடன் மழை.மாவட்ட செய்தி

காரைக்குடி அதை சுற்றுவட்டாரத்தில் இடி மின்னல் சூறை காற்றுடன் மழை.

10 ஜூலை, 2026
புதுவயல் நடராஜபுரத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்மாவட்ட செய்தி

புதுவயல் நடராஜபுரத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்

10 ஜூலை, 2026
தொழில் வணிகக் கழகம் சார்பில் பாராட்டு விழாமாவட்ட செய்தி

தொழில் வணிகக் கழகம் சார்பில் பாராட்டு விழா

29 ஜூன், 2026
கல்வி உதவித் தொகை வழங்கும் முகாம் மற்றும் மருத்துவ முகாம்மாவட்ட செய்தி

கல்வி உதவித் தொகை வழங்கும் முகாம் மற்றும் மருத்துவ முகாம்

29 ஜூன், 2026
காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் மதுரை சகோதயா செஸ் போட்டிமாவட்ட செய்தி

காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் மதுரை சகோதயா செஸ் போட்டி

29 ஜூன், 2026
காரைக்குடி நகர் பகுதியில்  கல்லால் தாக்கி வாலிபர் கொலைமாவட்ட செய்தி

காரைக்குடி நகர் பகுதியில் கல்லால் தாக்கி வாலிபர் கொலை

29 ஜூன், 2026
காரைக்குடியில் மாவட்ட ரோல் பால் சாம்பியன்ஷிப் - 2026 போட்டிமாவட்ட செய்தி

காரைக்குடியில் மாவட்ட ரோல் பால் சாம்பியன்ஷிப் - 2026 போட்டி

27 ஜூன், 2026
போதை ஒழிப்பு தீப்பந்த பேரணி கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு தொடங்கி வைத்தார்மாவட்ட செய்தி

போதை ஒழிப்பு தீப்பந்த பேரணி கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு தொடங்கி வைத்தார்

26 ஜூன், 2026
காரைக்குடி அருகே நடை பயிற்சிக்கு சென்ற பொழுது  கீழே கிடந்த 4 சவரன் தங்க தாலி செயின்மாவட்ட செய்தி

காரைக்குடி அருகே நடை பயிற்சிக்கு சென்ற பொழுது கீழே கிடந்த 4 சவரன் தங்க தாலி செயின்

25 ஜூன், 2026
கல்லூரி மாணவர்கள் நடத்திய போதைப் பொருள்  ஒழிப்பு விழிப்புணர்வு பேரணிமாவட்ட செய்தி

கல்லூரி மாணவர்கள் நடத்திய போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

25 ஜூன், 2026
காரைக்குடியில்  கண்ணதாசன் பிறந்த நாள் விழாமாவட்ட செய்தி

காரைக்குடியில் கண்ணதாசன் பிறந்த நாள் விழா

24 ஜூன், 2026
மாவட்ட செய்தி

காரைக்குடி அருகே கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

24 ஜூன், 2026
திரிஷா படத்தை மாநகராட்சி கூட்ட அரங்கில்  வைக்க கோரி காரைக்குடியில் கவுன்சிலர் அடம்மாவட்ட செய்தி

திரிஷா படத்தை மாநகராட்சி கூட்ட அரங்கில் வைக்க கோரி காரைக்குடியில் கவுன்சிலர் அடம்

24 ஜூன், 2026
சமுதாயத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள் காரைக்குடியில் அமைச்சர் பிரபு புகழாரம்மாவட்ட செய்தி

சமுதாயத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள் காரைக்குடியில் அமைச்சர் பிரபு புகழாரம்

20 ஜூன், 2026