முகப்பு
புத., 3 ஜூன், 2026
காரைக்குடியில்  மாபெரும் வடமாடு மஞ்சுவிரட்டு

காரைக்குடியில் மாபெரும் வடமாடு மஞ்சுவிரட்டு

16 காளைகள், 144 மாடு பிடி வீரர்கள் பங்கேற்பு

எழுத்தாளர் Sivagangai Admin · 22 மே, 2026
1 நிமிட வாசிப்பு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கோவில் தேர்த்திரு விழாவை முன்னிட்டு மண்ணின் மைந்தர்கள் நடத்தும் 8ம் ஆண்டு மாபெரும் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது இதில் சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 16 காளைகள் 144 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர் ஒவ்வொரு காளைகளுக்கும் தலா 20 நிமிடங்கள் நிர்ணயிக்கப்பட்டு 9 மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு சுற்றிலும் களமிறங்கினர். வீரர்கள் மற்றும் மாடுகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு களம் இறக்கப்பட்டனர். மாடுகளும் ஆக்ரோஷமாக களத்தில் விளையாட அதனை அடக்குவதற்காக வீரர்களும் உற்சாகத்துடன் மாடுகளை மடக்கி பிடித்து வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுக்கோப்பை மற்றும் ரூ.8000 ரொக்க தொகை உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியை சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் ஆர்வமுடன் கண்டு களித்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை காரைக்குடி மண்ணின் மைந்தர்கள் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?

மொத்த வாக்குகள்: 0