முகப்பு
புத., 3 ஜூன், 2026
 நூறாண்டுகளை கடந்து செட்டிநாட்டு கலைநயத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கும் "சிதம்பர விலாஸ்"

நூறாண்டுகளை கடந்து செட்டிநாட்டு கலைநயத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கும் "சிதம்பர விலாஸ்"

கோட்டையூரில் அறிவியல் தொழில்நுட்பம் குறைந்த காலத்தில் பிரமிக்க வைக்கும் தொழில்நுட்பத்துடன் வீட்டைக் கட்டிய முன்னோர்கள், கட்டிட கலை தொழிலாளர்களை நினைவு கூர்ந்து நன்றி தெரிவிக்கும் விதமாக நூற்றாண்டு விழா

எழுத்தாளர் Sivagangai Admin · 29 மே, 2026
1 நிமிட வாசிப்பு
காரைக்குடி, மே 29 சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூர் பி. எம்.ஏ வீதியில் அமைந்துள்ளது "சிதம்பர விலாஸ்" வீடு. நூறு ஆண்டுகளைக் கடந்தும் செட்டிநாட்டு கட்டிடக்கலையை பறைசாற்றும் விதமாக இன்றும் கம்பீரமாக காட்சியளித்து வருகிறது. 1924 இல் அண்ணாமலை என்பவரால் ரூ 33,000 மதிப்பீட்டில் 3 தளங்களுடன் ஒரு ஏக்கரில் இந்த வீடு கட்டப்பட்டது . தற்போது ஐந்து தலைமுறையாக இந்த வீட்டை பழமை மாறாமல் பராமரித்து வருகின்றனர். செட்டிநாடு பாரம்பரிய முறையில் ஒரு ஏக்கரில் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டின் முகப்பு 9 வளைவுகளுடன் பெல்ஜியம் கிரானைட் தூண்களுடன் அமைந்துள்ளது. 25 அடி உயரம் கொண்ட வரவேற்பு கால், மேக்கப் அறை உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட அறைகள், 5 கிணறு , மூன்று சமையலறை மற்றும் டைனிங் ஹால்களுடன் பிரம்மாண்ட முற்றம், வெப்பம் தாக்காத வேலைப்பாடுகளுடன் கூடிய மேற்கூரை, வழுவழுப்பான ஒன்றை அடி அகல சுவர் பார்ப்போரை வியக்க வைக்கிறது. இன்றும் முழுமையான பராமரிப்புடன் பாரம்பரிய பொலிவு மாறாமல் கம்பீரமாக காட்சியளிக்கிறது
அறிவியல் தொழில்நுட்பம் குறைந்த காலத்தில் பிரமிக்க வைக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய வீட்டைக் கட்டிய முன்னோர்களுக்கும் கட்டிட கலை தொழிலாளர்களுக்கும் நினைவு கூர்ந்து நன்றி தெரிவிக்கும் விதமாக சிதம்பர விலாஸ் வீட்டின் நூற்றாண்டு விழாவை பூர்வாங்க சேவை, பஜனை, கலாச்சார நிகழ்ச்சி, பட்டிமன்றம், ஸ்ரீ ராதா கோவிந்தா திருக்கல்யாண நிகழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர் .

இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?

மொத்த வாக்குகள்: 0