முகப்பு
புத., 2 செப்., 2026
வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்பதவி இழக்கும் காரைக்குடி மேயர் காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சைதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்பதவி இழக்கும் காரைக்குடி மேயர் காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சைதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி

திரிஷா படத்தை மாநகராட்சி கூட்ட அரங்கில் வைக்க கோரி காரைக்குடியில் கவுன்சிலர் அடம்

திரிஷா படத்தை மாநகராட்சி கூட்ட அரங்கில் வைக்க கோரி காரைக்குடியில் கவுன்சிலர் அடம் காரைக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் பொறுப்பு குணசேகரன் தலைமையில் தொடங்கியது. ஆணையாளர் பாலு முன்னிலை வகித்தார். கூட்டம் ஆரம்பித்ததும், மாநகராட்சியில் பணி ஒதுக்கப்பட்ட எந்த வேலையும் நடைபெறவில்லை என்று திமுக காங்கிரஸ் அதிமுக கவுன்சிலர்கள் அவை தொடங்குவதற்கு முன்பாகவே கூச்சலிட்டனர். மேலும், தற்போதைய முதலமைச்சர் விஜய் படம் மட்டும் மாமன்ற கூட்ட அரங்கில் தொங்க விடப்பட்டிருந்தது. இதையடுத்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி படத்தையும், தி.மு.க., கவுன்சிலர்கள் மு.க., ஸ்டாலின் படம் வைக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர். வேறு வழியின்றி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி, மு.க., ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படமும் வைக்கப்பட்டது. இதில் பங்கேற்ற சுயேச்சை மாமன்ற உறுப்பினர் மெய்யர் வருங்கால முதல்வர் திரிஷா படத்தை வைக்க வேண்டும், இந்த வெற்றிக்கு அவர்தான் காரணம் என்று கோரிக்கையை எழுப்பிய தால் கலகலப்பு ஏற்பட்டது.