
பக்ரீத் தொழுகை அமைச்சர் பிரபு நன்றி தெரிவித்தார்
காரைக்குடி ஈதுகா மைதானத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்பு வாக்களித்த இஸ்லாமிய பெருமக்களை சந்தித்து நன்றி தெரிவித்த அமைச்சர் டாக்டர் டி கே பிரபு.
எழுத்தாளர் Sivagangai Admin · 28 மே, 2026
1 நிமிட வாசிப்பு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வ உ சி சாலையில் உள்ள ஈதுகா மைதானத்தில் இன்று பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது இதில் காரைக்குடி நகரின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட இஸ்லாமிய சகோதரர்கள் சிறப்பு தொழுகைகள் பங்கேற்று தொழுகை செய்தனர் காரைக்குடி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற
்றி பெற வைத்த இஸ்லாமிய சகோதரர்களை தொழுகை நடைபெற்ற ஈதுகா மைதானத்திற்கு நேரில் வந்த கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு அவர்களிடம் வாக்களித்தமைக்கு நன்றி தெரிவித்தார் அதனை தொடர்ந்து இஸ்லாமிய இளைஞர்கள் அமைச்சருடன் புகைப்படம், மற்றும் செல்பி எடுத்துக் கொண்டனர் அமைச்சர்இஸ்லாமிய இளைஞர்களை ஆறத்தழுவி பக்ரீத் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
