முகப்பு
திங்., 19 அக்., 2026
• காரைக்குடியில் சமுதாய வளைகாப்பு விழா 2026 - அமைச்சர் T.K. பிரபு பங்கேற்பு• தங்க மோதிரம் வழங்கிய அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு• தேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்• பள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே வழங்கக் கோரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு• ஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்• டாக்டர் உமையாள் ராமநாதன் 98-வது பிறந்தநாள் விழா• காரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு • தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும் ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.• பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது• பள்ளத்தூர் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்• காரைக்குடியில் சமுதாய வளைகாப்பு விழா 2026 - அமைச்சர் T.K. பிரபு பங்கேற்பு• தங்க மோதிரம் வழங்கிய அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு• தேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்• பள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே வழங்கக் கோரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு• ஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்• டாக்டர் உமையாள் ராமநாதன் 98-வது பிறந்தநாள் விழா• காரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு • தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும் ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.• பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது• பள்ளத்தூர் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்

பள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே வழங்கக் கோரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு

காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் பேரூராட்சியில், புதிதாகக் கட்டப்பட்ட வாரச்சந்தைக் கடைகளை நீண்டகாலமாக வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கே வழங்க வலியுறுத்தி, திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளத்தூர் பேரூராட்சியில் சுமார் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக வாரச்சந்தைக் கடைகள் கட்டப்பட்டு கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்டது. நீண்டகாலமாக அந்த இடத்தில் கடை நடத்தி வரும் வியாபாரிகளுக்கு, தலா 10 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகை பெற்றுக்கொண்டு மீண்டும் கடைகள் ஒதுக்கீடு செய்யப் பேரூராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், சிவகங்கை மாவட்ட உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) அந்தத் தீர்மானத்தை ரத்து செய்துவிட்டு, கடைகளைப் பொது ஏலத்தில் விட அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பேரூராட்சி கவுன்சிலர்கள், நீண்டகாலமாக வாரச்சந்தையில் கடை நடத்தி வரும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளித்து கடைகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மகமைக்கான பொது ஏலத்திற்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், ஏற்கெனவே கடை நடத்தி வரும் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். ஆனால் பேரூராட்சி நிர்வாகமோ மகமை வசூல் செய்ய ஆன்லைனில் ஏலம் விடுவதாக கூறியுள்ளது. ஆன்லைனில் ஏலம் விட்டால் வெளி நபர்கள் அதை ஏலம் எடுக்கும்போது, அதிக தொகை செலுத்த வற்புறுத்துவார்கள். அவ்வாறு நடந்தால், ஏலத்தில் கடைகளைப் பெறுபவர்கள் நிர்ணயிக்கும் விலைக்கு ஏற்ப காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கவலை தெரிவித்தனர். ஆனால் பள்ளத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் இதை கவனத்தில் எடுக்காமல், பேரூராட்சிக்கு வருவதையே தவிர்த்து வருகிறார். இது குறித்து பேரூராட்சி கவுன்சிலர் சோலைமலை கூறுகையில், ஏற்கெனவே கடை நடத்தி வரும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், வரும் மார்ச் மாதம் வரை பேரூராட்சி நிர்வாகமே கடை வாடகையை வசூலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். வியாபாரிகளின் வாழ்வதாரத்தை கருத்தில் கொள்ளாமல், வருமானத்தை மட்டுமே நிர்வாகம் கவனத்தில் கொள்கிறது. எனவே உள்ளூர் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், வாரச்சந்தைக் கடைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, அவர் வழக்கம்போல் போனை எடுக்கவில்லை.