முகப்பு
திங்., 19 அக்., 2026
• காரைக்குடியில் சமுதாய வளைகாப்பு விழா 2026 - அமைச்சர் T.K. பிரபு பங்கேற்பு• தங்க மோதிரம் வழங்கிய அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு• தேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்• பள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே வழங்கக் கோரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு• ஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்• டாக்டர் உமையாள் ராமநாதன் 98-வது பிறந்தநாள் விழா• காரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு • தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும் ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.• பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது• பள்ளத்தூர் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்• காரைக்குடியில் சமுதாய வளைகாப்பு விழா 2026 - அமைச்சர் T.K. பிரபு பங்கேற்பு• தங்க மோதிரம் வழங்கிய அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு• தேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்• பள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே வழங்கக் கோரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு• ஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்• டாக்டர் உமையாள் ராமநாதன் 98-வது பிறந்தநாள் விழா• காரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு • தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும் ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.• பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது• பள்ளத்தூர் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்

கார் விபத்தில் பெற்றோரை இழந்தும் விடாமுயற்சியால் மருத்துவக் கல்லூரியில் இடம்பிடித்த மாணவர் நேரில் சந்தித்து கல்வி உதவித்தொகை வழங்கிய அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு

காரைக்குடியைச் சேர்ந்த சிவக்குமார் – ஜோதிலட்சுமி தம்பதியினருக்கு சந்தோஷ் குமார் மற்றும் வேல்முருகன் என இரண்டு மகன்கள் உள்ளனர். திருப்பூரில் குடும்பத்துடன் தங்கி தனியார் உணவகத்தில் பணிபுரிந்து வந்த சிவக்குமார், கடந்த 2017ஆம் ஆண்டு தனது குடும்பத்தினருடன் காரைக்குடிக்கு காரில் வந்து கொண்டிருந்தபோது, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சிவக்குமார் மற்றும் அவரது மனைவி ஜோதிலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் அவர்களது மகன்களான சந்தோஷ் குமார் மற்றும் வேல்முருகன் ஆகியோரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த விபத்தில் சந்தோஷ் குமாருக்கு காலில் ஊனம் ஏற்பட்டது. பெற்றோரை இழந்த இரு சகோதரர்களையும் அவர்களது தாய்மாமா பாண்டி மற்றும் அத்தை விமலா ஆகியோர் தங்களது சொந்த பிள்ளைகளைப் போல் அரவணைத்து, சிகிச்சை அளித்ததுடன் பள்ளியில் சேர்த்து தொடர்ந்து படிக்க வைத்தனர். தனது உடல் குறைபாட்டையும், பெற்றோரை இழந்த துயரத்தையும் கடந்து விடாமுயற்சியுடன் படித்த சந்தோஷ் குமார், காரைக்குடியில் உள்ள அரசு உதவி பெறும் எஸ்.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 510 மதிப்பெண்கள் பெற்றார். தொடர்ந்து, நீட் தேர்வில் 366 மதிப்பெண்கள் பெற்ற சந்தோஷ் குமாருக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டின் மூலம் சென்னை ஸ்டாலின் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேரும் வாய்ப்பு கிடைத்தது. பெற்றோரை இழந்த நிலையிலும் தனது மருத்துவக் கனவை விடாமுயற்சியுடன் நனவாக்கிய சந்தோஷ் குமாரை பாராட்டும் வகையில், இயற்கை மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்தார். அப்போது மாணவர் சந்தோஷ் குமாருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த அமைச்சர், கல்வி உதவித்தொகையும் வழங்கினார். மேலும், மாணவரின் மருத்துவப் படிப்பிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதியளித்தார். அமைச்சரின் இந்த உதவியால் மாணவர் சந்தோஷ் குமார், அவரது தாய்மாமா பாண்டி, அத்தை விமலா மற்றும் சகோதரர் வேல்முருகன் ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.