கிருஷ்ண ஜெயந்தி விழா ஸ்ரீ பாமா ருக்மணி சமேத வேணுகோபால் சுவாமி சன்னதியில் அமைச்சர் டி.கே. பிரபு சாமி தரிசனம்
காரைக்குடி கணேசபுரம் யாதவர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பாமா ருக்மணி சமேத வேணுகோபால் சுவாமி சன்னதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பாமா, ருக்மணி சமேத வேணுகோபால் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பெண்கள் மற்றும் சிறுமிகள் கோலாட்டம் ஆடி கிருஷ்ண ஜெயந்தி விழாவை உற்சாகமாக கொண்டாடினர். விழாவில் கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் அமைச்சருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், கிருஷ்ணர் வேடம் அணிந்திருந்த குழந்தைகளுடன் அமைச்சர் டி.கே. பிரபு புகைப்படம் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.