தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும் ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்
காரைக்குடி,அக்.,-3 சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் - லதா தம்பதியினரின் மூத்தமகள் உமா மகேஸ்வரி (28) இவர் மைசூரை சேர்ந்த சுரேஷ்குமார் (36) என்பவரை திருமணம் செய்த நிலையில் முதல் குழந்தை காரைக்குடியில் பிரசவமான நிலையில் இரண்டாவது குழந்தை பிரசவத்திற்காக கடந்த 6 மாதமாக தாய் வீட்டில் தங்கி அருகிலுள்ள முத்துப்பட்டணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனையும் செய்து வந்துள்ளார் கடந்த 22 -09-26 அன்று காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது 01-10 - 26 அன்று தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் மோதிரம் வழங்கப்படும் என்று டோக்கனும் வழங்கப்பட்ட நிலையில் ஆதார் எண் மைசூர் முகவரி என்பதால் முகம் ஸ்கேன் மற்றும் விரல் ரேகை பதிவை கணினி ஏற்றுக்கொள்ளவில்லை என மோதிரம் வழங்கப்படவில்லை இது குறித்து உமாமகேஸ்வரி கூறிய போது முதல்வர் ஜோசப் விஜய் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் அறிவித்த போது மகிழ்ச்சியடைந்தேன் மோதிரத்திற்கான டோக்கன் பெற்ற நிலையில் தற்போது மோதிரம் மறுக்கப்பட்டது மிகுந்த ஏமாற்றமாக உள்ளதாக வருத்தத்துடன் கூறியவர் மோதிரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.